வங்க தேசத்தில் இந்துக்களின் உயிருக்கு ஆபத்து
ஹாப்ரா (மேற்கு வங்காளம்):
வங்கதேசத்தில் கொடுமைப்படுத்தப்படும் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்கள்உடைமைகளையும். தஙகள் உறவினர்களையும் விட்டுவிட்டு இந்திய எல்லைக்குள் தப்பி வரும் அவலம்சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்க தேசத்திலிருந்து தப்பி வந்த பிது புஷன் தாஸ் என்பவர் நிருபரிடம் கூறுகையில், வங்க தேசத்தில்நடக்கும் இந்த அவலங்கள் வெளி உலக்குக்கு தெரிவதில்லை என்பது வருந்தத்தக்கது. இங்கு வசிக்கும்சிறுபான்மை இந்துக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக இந்துப் பெண்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். நூற்றுக்கணக்கான இந்துப் பெண்கள்கற்பழிக்கப்பட்டுள்ளனர். கொடுமை தாளாமல் பல பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று போலீசாரும், நகராட்சி அலுவலர்களும் மழுப்பிவருகின்றனர். ஹகிம்புர், போன்கான் எல்லை வழியாக பார்தமான் மற்றும் மிதான்பூர் மாவட்டங்களுக்கும் தப்பிசெல்கின்றனர்.
வேறு சிலர் கோல்கத்தா வழியாக அந்தமானுக்கு தப்பி செல்வதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
நான் தாக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் எனது முஸ்லிம் நண்பர் வீட்டில் அடைக்கலம் கேட்டேன். ஆனால்இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் தாக்கப்படுவார்கள் என்று எனது முஸ்லிம் நண்பர் எனக்குஅடைக்கலம் தர மறுத்துவிட்டார் என்றார் தாஸ்.
வங்க தேசத்திலிருந்து பரிஷால் மற்றும் போலா மாவட்டங்களில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள் கூறுகையில்,
இது இந்துக்களுக்கு எதிரான போர். அவாமி லீக் அமைப்புகள் கூட எங்களை பாதுகாக்க முடியவில்லை.
அவாமி லீக்கைச் சேர்ந்நதவர்களும் வங்கதேச நேஷனல் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல்நடத்துகின்றனர். வங்கதேச நேஷனல் கட்சியினரின் ஒரே குறிக்கோள் இந்துக்களை அழிக்க வேண்டும்என்பதுதான்.
கடந்த மாதம் (அக்டோபர்) நடந்த தேர்தலின் போது நடந்த நிகழ்ச்சிகள் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்ததைவிட மிக மோசமானது என்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சிறுபான்மை இந்துக்களின் வீட்டை கொள்ளையடிக்கின்றனர். இது போல்இந்துக்களை தாக்கி, கொடுமைப்படுத்திய பின் அவர்கள் டேப் ரெக்கார்டருடன் வந்து "நாங்கள் நலமுடன்இருக்கிறோம்" என்று கூறச் சொல்லி அதைப் பதிவு செய்து செல்வார்கள் என்று தன் மூன்று பெண் குழந்தைகளுடன்தப்பி வந்த சிபாலி ராய் என்பவர் கண்ணீர் மல்க கூறினார்.
இந்தியாவின் பானிபூர், போலாபாரா. ஹிராபுல் பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லை தாண்டி வரும் மக்களிடம்அனுதாபத்துடன் நடந்து கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் 1971ம் ஆண்டு வங்க தேசத்தில் நடந்தவன்முறையின் போது அங்கிருந்து குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு வங்கதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் குறித்த விவரங்கள் முன்னரே கிடைத்து விடுகிறது.பானிபூரில் வசிக்கும் கோபால் கோஷ் என்பவர் இதுகுறித்து கூறுகையில், "4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று மாதாப்தாஸ் வீட்டிற்கு நாளை வருகின்றனர். போலாபாராவுக்கு 100 குடும்பங்கள் அடுத்த செவ்வாய்க்கிழமைவருகின்றனர்" என்று கூறினார்.
அகதிகளுக்கான முகாமை நடத்தி வரும் பிமால் மஜும்தார் கூறுகையில் வங்கதேசத்திலிருந்து 400 பேர் விரைவில்அகதிகளாக வந்து சேருவார்கள் என்று கூறினார்.
வங்கதேசத்திலிருந்து இந்துக்கள் எல்லை கடந்து வருவது குறித்து ஹாப்ரா காவல் நிலைய போலீசார் கூறுகையில்,இடம் பெயர்ந்து வருபவர்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த வேண்டியது எல்லை பாதுகாப்பு படையினரின்(பி.எஸ்.எப்) வேலை என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications