திமுக மீது பழிபோடுவதா? - அதிமுகவுக்கு இளங்கோவன் கண்டனம்
சென்னை:
நிதி நெருக்கடிக்கு திமுக மீது குற்றம் சுமத்தி அதிமுக அரசு தப்பிக்க நினைப்பது தவறு என்று தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த திமுக அரசு கஜானாவை காலியாக்கிவிட்டு சென்று விட்டதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றுதமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதே கருத்தை தமிழக அமைச்சர் பொன்னையனும்கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக அரசின் மீது குற்றம் சுமத்தி அவர்கள் மீது பழி போட்டுவிட்டு அதிமுக தப்பித்துக் கொள்ளமுனைவது தவறானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து அவர்சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது குறித்து பல விதமானதகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த மிரட்டலை போலீசாரே பரப்பி விட்டதாகவும், கொலை மிரட்டல் பொய்யானது என்றும் கூறப்படுகிறது.உண்மை எதுவாக இருந்தாலும், தீவிரவாதிகளால் அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து வருவதும், கொலைமிரட்டல் வருவதும் கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு வந்துள்ள கொலை மிரட்டலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளதற்கு இந்த கொலை மிரட்டல் ஓர் எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு கடந்த திமுக ஆட்சி தான் காரணம் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வமும், நிதி அமைச்சர் பொன்னையனும் கூறியுள்ளதை ஒப்புக் கொள்ள முடியாது.
திமுக ஆட்சி சரியில்லை என்றுதான் மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இவர்கள் கடந்த திமுகஆட்சி மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைப்பது தவறு என்றார் இளங்கோவன்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications