புதுவை அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்த 3 பேரையும் அமைச்சராக்க மத்திய உள்துறைஅமைச்சகம் சம்மதம் அளித்ததையடுத்து பாண்டிச்சேரி அமைச்சரவை விரைவில் விரிவாக்கப்படும் என்றஅதிகாரிகள் தெரிவித்ததுள்னர்.
பாண்டிச்சேரியின் 15வது முதல்வராக ரங்கசாமி சென்ற மாதம் (அக்டோபர்) 27ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
பாண்டிச்சேரி அமைச்சர்களாக இ. வல்சராஜ். எம். சந்திரகாசு மற்றும் கே. லட்சுமி நாராயணன் ஆகியோர் பெயரைபரிந்துரை செய்து பாண்டிச்சேரி ஆளுனர் ரஜினிராயிடம் கொடுத்திருந்தார் ரங்கசாமி.
இவர்களது பெயரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக ரஜினிராய் அனுப்பி வைத்தார். ரங்கசாமி பரிந்துரை செய்த 3பேரையும் அமைச்சராக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து பாண்டிச்சேரிஅமைச்சரவை விரைவில் விரிவபடுத்தப்படும். இந்த தகவலை பாண்டிச்சேரி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications