காவல்துறையை நவீனப்படுத்த ரூ.136 கோடியில் திட்டம்
சென்னை:
தமிழக காவல்துறையை நவீனப்படுத்த ரூ.136 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதி செலவைமத்திய அரசு ஏற்கும்.
இது தொடர்பாக சென்னையில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது.
ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் தமிழகக் காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசிடம்நிதியுதவி கேட்கப்பட்டிருந்தது. அதில் ரூ.200 கோடி செலவில் நவீன ரக ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவசதிகளை ஏற்படுத்த திட்டம் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வேண்டுகோளை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் நிதி நிலைமை மற்றும் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின்அளவைக் கருத்தில்கொண்டு, ரூ.200 கோடி நிதியுதவி அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.
ஆனால், ரூ.136 கோடியில் புதிய திட்டத்தைத் தயார் செய்யுமாறும், அந்தத் தொகையில் பாதியை (ரூ. 68 கோடி)மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும், மீதியை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசுகூறிவிட்டது.
ஒரு வாரத்திற்குள் இந்தத் திருத்தப்பட்ட திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்துசேர வேண்டும் என்றும்தெரிவித்திருந்தது.
இதையடுத்து இன்று (வியாழக்கிழமை), தமிழக உள்துறைச் செயலாளர் நரேஸ்குப்தா, தலைமைச் செயலாளர்சங்கர், காவல்துறைத் தலைவர் நெய்ல்வால் ஆகியோர் அடங்கிய உயர் அதிகாரிகள் குழு, ஆலோசனைநடத்தியது.
கூட்டத்தில், ரூ.136 கோடியில் தீட்டப்படும், திட்டத்தில் என்னென்ன வகை, நவீன வசதிகள் இடம்பெற வேண்டும்என்று ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தமிழகக் காவல்துறைக்கு நவீன ரக ஆயுதங்கள், வாகனங்கள், மற்றும் தொலைதொடர்புக் கருவிகள்உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக டி.ஜி.பி., நெய்ல்வால் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications