சேலம்: பணயம் வைக்கப்பட்ட சிறுவன் - போலீஸ் சுட்டதில் குறி தவறி காப்பாற்றப் போனவர் பலி
சேலம்:
சேலம் அருகே ரூ.1 லட்சம் பணம் கேட்டு சிறை வைக்கப்பட்ட சிறுவனை மீட்க போலீசார் துப்பாக்கி சூடுநடத்தியதில் அச்சிறுவனைக் காப்பாற்றச் சென்றவர் மீது துப்பாக்கி குண்டு குறி தவறி பாய்ந்ததால் இறந்து போனார்.
சேலம், தாசநாயக்கன்பட்டிக்கு அருககேயுள்ள நிலவாரப்பட்டி போயர் தெருவில் வசித்து வருபவர் தேவாராஜ் (35).இவர் ஒரு காண்டிராக்டர். இவரது மனைவி கவுரி (30). இவர்களுக்கு பிரியங்கா (10) என்ற மகளும் சரண்ராஜ் (7)என்ற மகனும் உள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) தேவராஜின் தங்கை சரோஜா தனது 4 வயது மகன் ராஜாராமுடன் தேவராஜின் வீட்டிற்குவந்திருந்தார்.
இந்நிலையில் காலை அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசாமி (30) என்பவர் தேவராஜின் வீட்டிற்கு வந்தார்.வீட்டிற்குள் வந்த அவர் ரூ.1 லட்சம் கொடுக்காவிட்டால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.
இதனால் பயந்து போன கவுரி, தன் குழந்தைகளான பிரியங்கா, சரண்ராஜ் ஆகியோருடன் வீட்டிலுள்ள ஒருஅறைக்கு சென்று அறையையும் பூட்டிக் கொண்டார்.
இதனால் கோபம் கொண்ட ராமசாமி, சிறுவன் ராஜாராமைத் தூக்கிக் கொண்டு அவனை கொல்லப் போவதாகமிரட்டினார்.
தேவராஜின் வீட்டில் சத்தம் கேட்பதை கேட்டு அருகில் குடியிருக்கும் மக்கள் தேவராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.அப்போது தேவராஜின் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதையும், ராமசாமி கோபம் கொண்டகண்களுடன் ஒரு கையில் குழந்தையுடனும் மறு கையில் கத்தியுடனும் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
ராமசாமி மீண்டும் தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று கூறி, "தேவராஜை வரச் சொல்லுங்கள்.இல்லாவிட்டால் குழந்தையை கொன்று விடுவேன்" என்று மிரட்டினார்.
சம்பவம் நடக்கும் போது தேவராஜ் வீட்டில் இல்லை. இதையடுத்து உடனடியாக அவருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தும் அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்துமல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் மற்றும் பல போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ்சீருடையில் இல்லாமல் மப்டியில் வந்து, தாங்கள் யார் என்று கூறாமல் பூட்டிய வீட்டுக்குள் இருந்த ராமசாமியுடன்பேசினர்.
அப்போது ராமசாமி தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும், அல்லது நிலத்தை தன் பெயரில் எழுதித் தர வேண்டும்என்று கூறினான்.
உடனடியாக பணம் மற்றும் நில பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. வெளியே வந்தால் பணம் தருவதாக போலீசார்கூறினார். ஆனால் வெளியே வந்தால் தான் பிடிபட்டுவிடுவோம் என்று வெளியே வரவில்லை ராமசாமி.
இந்நிலையில் கவுரி இருந்த அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு கவுரி குழந்தைளுடன் காப்பாற்றப்பட்டார்.
போலீசார் ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்த போது தேவராஜின் உறவினரான எஞ்ஜினியர் சண்முகம் (24)என்பவரும், பொதுமக்கள் சிலரும் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
ராமசாமி நேரத்தைக் கடத்திக் கொண்டே போனதால் நிலைமை மோசமாகி போவதை உணர்ந்த சேலம் ரூரல்போலீஸ் கண்காணிப்பாளர் இளங்கோவன், துப்பாக்கியால் ராமசாமியைச் சுட்டு சிறுவனை மீட்க முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் கைத்துப்பாக்கியால் ராமசாமியின் ழுழங்காலை குறிவைத்து சுட்டார். இதில் ராமசாமிமுழங்காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த ராமசாமி தரையிலிருந்து கத்தியை எடுக்க முயன்றபோது இளங்கோவன் இரண்டாவது முறையாக ராமசாமியை நோக்கிச் சுட்டார்.
ஆனால், இந்தக் குண்டு சிறுவனை மீட்க வீட்டிற்குள் நுழைந்திருந்த சண்முகத்தின் தாடையில் குறி தவறிப் பாய்ந்தது.அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இதற்குள் போலீசார் ராமசாமியை பிடித்து சிறுவனை மீட்டனர்.
காயமடைந்த சண்முகம் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர்மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இந்த தகவல் கிடைத்து சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட வருவாய் துறைஅதிகாரி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அப்பகுதி முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீசார்அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications