கருணாநிதியின் இரட்டை வேடம்: வாழப்பாடி
சென்னை:
"கருணாநிதி இரட்டை வேஷம் போடுபவர். முதல்வராக இருக்கும் போது ஒன்றும், முதல்வராக இல்லாத போதுஒன்றும் பேசுவார்" என்று கூறியுள்ளார் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
இது குறித்து சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிரவாதம் பற்றி பேச கருணாநிதிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. தீவிரவாதத்தின் மொத்த உருவமேஅவர்தான். அரசு ரீதியில் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வளர்த்தவர் அவர்தான்.
கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் விடுதலை புலிகள் தமிழகத்தில் முகாம் அமைத்து செயல்பட்டு வந்தனர்.
சென்னை, அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலை புலிகள் தலைவர்பிரபாகரன் தனது வெற்றிக்காக தேர்தலில் உழைத்ததாக கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் முதல்வராக இல்லாத போது எதிர் கட்சியினர் மீது தீவிரவாதிகளை ஏவி விடுவார். முதல்வராக இருந்தால்தீவிரவாதிகளுடன் சமாதானம் செய்து கொண்டு அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வார்.
கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை புரிந்து கொண்டுதான் மக்கள் அவரை தமிழக சட்டசபை தேர்தலிலும்,உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரிக்கவில்லை.
கருணாநிதி இனிமேலாவது எதிரி கட்சியாக செயல்படாமல், பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்பட வேண்டும்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications