ராமநாதபுரம்: ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - 4 பேர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கியூபிராஞ்ச் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரூ.11 லட்சம் கள்ள நோட்டுக்களைப்பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மூலக்கொத்தளம் என்ற இடத்தில் கியூ பிராஞ்ச் டி.எஸ்.பி.சந்திரசேகரன் தலைமையில்போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோவை நிறுத்தி,சோதனை செய்தனர்.
காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனே போலீசார் கள்ள நோட்டுக்களைக் கைப்பற்றியதுடன், காரில் வந்த விருதுநகர் ஈஸ்வரன், திண்டுக்கல் சபர்உல்லா, கடலூர் நாராயணசாமி ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், இதேபோல 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை பெரம்பலூர், திருச்சி, ஈரோடு,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரம்பலூரில் திருமாவளவன் என்பவர் வைத்திருந்த ரூ.6 லட்சம்மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும், ரூ.8 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுத் தயாரிக்கும் இயந்திரங்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நல்லதம்பி முன்புஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 4 பேரையும், 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications