கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்
மாஸ்கோ:
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கத் தேவையான கருவிகளை ரஷ்யா அடுத்த ஆண்டிலிருந்து வழங்கஆரம்பிக்கும் என்று அந்நாட்டு அணு சக்தித் தொழில்நுட்பத் துறை அதிகாரி விக்டர் கோஷ்லோவ்தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் தூத்துக்குடி அருகே உள்ள கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் ரஷ்யா சென்ற போது,அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
2.6 பில்லியன் டாலரில் இந்த அணு மின் நிலையத்தை அமைத்துத் தர ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.அதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் வாஜ்பாயும், ரஷ்ய அதிபர் புடினும் கையெழுத்திட்டனர்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1991ல் சோவியத்யூனியனில் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது இந்தத் திட்டத்திற்கு புது வடிவம் கொடுப்பட்டு, அதை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரி விக்டர் கோஷ்லோவ் கூறுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும்.
மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் கதிரியக்கக் கருவிகள் வழங்கப்படும். கதிரியக்கக் கருவிகளின் உற்பத்தியில்ரஷ்யாவில் உள்ள 300 நிறுவனங்கள் ஈடுபட உள்ளன என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications