1000க்கும் மேற்பட்டவர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை பஸ் ஸ்டிரைக் தொடங்கியவுடன் சென்னை ஆலந்தூர் பஸ் டிப்போவில் நுழைந்த போலீசார்அங்கிருந்த டிரைவர்களிடம் உடனடியாக பஸ்களை இயக்குமாறு கூறினர். ஆனால், அவர்கள் ஓட்ட மறுத்தனர்.
இதையடுத்து டிரைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 60 டிரைவர்களைபோலீசார் கைது செய்தனர்.
காஞ்சியில் தடியடி:
காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
20 சதவீத போனஸ் கோரி அரசு டிப்போவின் வெளியே போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டம்நடத்தினர். அவர்களை கலைந்து போகுமாறு போலீஸ் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து அவர்களை போலீசார் லத்தியால் தாக்கினர். அடித்து விரட்டினர். இதற்க போக்குவரத்து ஊழியர்கள்எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் ரோட்டில் கூடினர். இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கத்தினர்கூறியுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications