மகளிர் கிரிக்கெட் அணி: மம்தா தேர்வாவாரா?
பெங்களூர்:
இன்டியா இன்போவின் துணை நிறுவனமான தட்ஸ்கிரிக்கெட் டாட் காம் இணையத்தளத்தைச் சேர்ந்த மம்தா மாபென் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள இந்தியமகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்த 21 பேரிலிருந்து 12 பேர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் போட்டிக்குதேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மம்தாவின் சாதனைகள்:
தென் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியிலும், ரஞ்சி ஜான்சி சாம்பியன்ஷிப்போட்டிகளிலும் மம்தா விளையாடியுள்ளார். பேட்டிங் மற்றும் பெளலிங்கில் மிகச்சிறந்த வீராங்கனை இவர்.
மம்தா கர்நாடக அணி சார்பிலும் விளையாடியிருக்கிறார். இவர் இன்டர்-ஜோனல்சாம்பியன் ஷிப் போட்டியில் தெற்கு பிராந்திய அணியின் கேப்டனாவும் இருந்தார்.
அப்போது அவர் ரயில்வே அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலஅணிக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருந்தார். மேற்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளைகைப்பற்றினார்.
இது போன்ற சாதனைகளால் மம்தா இன்டர் -ஜோனல் மீட் போட்டி தொடரின் சிறந்தவீராங்கனை என்ற விருதை பெற்றார்.
தேர்வாகியுள்ள 21 பேர்:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள 21 பேர்(ப்ராபபல்ஸ்) விவரம்:
மிதாளி ராஜ், ரூபாஞ்சலி சாஸ்த்திரி, தீபா குல்கர்னி, நீது டேவிட். ஹேமலதா காலா,சுனிதா சிங், லக்ஷனா பண்டிட், அஞ்சு ஜெயின், அன்ஜுன் சோப்ரா, ஜுலன்கோஸ்வாமி, உஷா, மம்தா மாபென், நூஷினால் காதிர், கருணா ஜெயின், ஸ்வர்ணலட்சுமி, குல்ஷன், ஜெயா ஷர்மா, பிந்தேஸ்வரி, சீமா போவ்மிக், மோனிகா, அர்பிதா.
இதிலிருந்து 12 பேர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடதேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications