தமிழகத்தில் வேலியே பயிரை மேய்கிறது- பா.ஜ.க. குற்றச் சாட்டு
சேலம்:
தமிழகத்தில் வேலியே பயிரை மேய்கிறது, அமைச்சரே கவுன்சிலரைக் கடத்தி சிறை வைக்கிறார் என்று மத்தியவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) சேலத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேலும்கூறியதாவது,
பாரதிய ஜனதாவின் கொள்கைகளையும், வாஜ்பாய் அவர்களின் தலைமைமையையும் ஏற்பவர் யாராகஇருந்தாலும், தாராளமாக இந்த இயக்கத்தில் சேரலாம். எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு விரைவில்தனது கட்சித் தொண்டர்களுடன், பாரதிய ஜனதாவில் இணையவிருக்கிறார். அதை நாங்கள் முழுமனதுடன்வரவேற்கிறோம்.
இங்கு தேசியம், தெய்வீகம் ஆகிய இரண்டுமே உள்ளது. இதை விரும்புபவர்கள் அனைவரும், இந்த இயக்கத்தில்இணையலாம்.
தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற கூறப்படுகிறது. தமிழக அரசு இதையே கூறிக்கொண்டிருக்காமல்,இதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நாங்கள் மகிழ்வோம்.
தமிழகத்தில் திமுக மற்றும் பா.ஜ.க. இடையே சுமூகமான உறவு நீடிக்கிறது.
நாமக்கல்லில் பா.ஜ.க., கவுன்சிலரை கடத்திச் சென்று அமைச்சர் தனபால் வீட்டில் சிறைவைத்துவிட்டனர்.
கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி., என அனைத்து உயரதிகாரிகளுக்கம் இது தெரிந்திருந்தும், ஒரு வழக்குக் கூட பதிவுசெய்யப்படவில்லை.
தமிழகத்தில் வேலியே பயிரை மேயும் நிலை நிலவுவதைத் தான் இது காட்டுகிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனே முதல்வரும், கவர்னரும் நடவடிக்கை எடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications