அதிமுக அரசின் திறமையின்மை: கருணாநிதி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்துத்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு சுமுகமான முறையை கையாளவேண்டும்.நிதி நிலையை சரி செய்தாதது அதிமுகவின் நிர்வாகதிறமின்மையை காட்டுகிறது என்று திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு சுமுகமான முறையை கையாள வேண்டும். பேருந்துகள் ஒடாதகாரணத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல அரசியல் கட்சி தலைவர்களும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு முயல வேண்டும் என்றுகோரிக்கை விடுத்த பின்னும் அரசு எந்த விதமான முயற்சியிலும் ஈடுபடாமல் இருக்கிறது.

நிதி நிலையில் நெருக்ககடி ஏற்பட்டுள்ளதாக கூறி போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கேட்ட போனஸ் தொகையைவழங்க முடியவில்லை என்று அரசு கூறியுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்து 6 மாத காலமாகிறது. இன்னமும் நிதி நிலையை சரி செய்ய முடியாதது அவர்கள் நிர்வாகதிறமையின்மையையே காட்டுகிறது என்று கூறினார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+