ஏரியாவை ஏலம் எடுத்து தீபாவளி மாமூல்: ஜகஜால போலீஸ்
சிவகங்கை:
வழக்கமான மாமூல் போதாது என்று தீபாவளியை முன்னிட்டு ஏரியாவையே ஏலம் போட்டு சிறப்பு மாமூல்வசூலித்த 20 போலீசார் கூண்டோடு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்ட போலீசார் மாமூல் வசூலிப்பதில் அதிநவீனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதாவது, ஒரு காவல் நிலையத்தின் கட்டுபாட்டில் கீழ் வரும் பகுதியை போலீசார் பல ஏரியாக்களாகப் பிரித்துக்கொண்டனர். ஒவ்வொரு ஏரியாவையும் ஒரு போலீசார் ஏலம் எடுத்துக் கொண்டனர். இந்த ஏலத் தொகையைஏரியா எதையும் ஏலம் எடுக்காத போலீசார் பிரித்துக் கொள்ளலாம்.
ஏலத் தொகையை செலுத்திவிட்டால் அந்த ஏரியாவில வேறு போலீஸ்காரர் போய் கடைக்காரர்களிடம் பணம்வசூலிக்க மாட்டார். அந்த ஏரியாவை ஏலம் எடுத்த போலீஸ்காரர் மட்டும் தனியொரு மனிதராகச் சென்று ஒயின்ஷாப், குஜால் லாட்ஜ்கள், கலப்பட கடைகள், ரெளடிகள் மற்றும் நியாயமாக செயல்படும் கடைகள், ஹோட்டல்கள்,கார், லாரி ஓனர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தீபாவளி இனாம் வசூலித்துக் கொள்வார்.
இந்த போலீசாரிடம் தப்புபவர்கள் பிச்சைக்காரர்களும் பழைய பேப்பர் பொறுக்கும் ஆட்களும் தான். மற்றபடிஇவர்கள் கண்ணில் யாரும் தப்புவதில்லை.
சிவகங்கையில் மட்டும் தான் இந்த ஏல முறை வெளியில் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளின் காவல்நிலையங்களிலும் வழக்கத்தில் இருக்கும் முறை தான் இது என்று கூறி நம்மை திகைக்க வைத்தார் போலீஸ் நண்பர்ஒருவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications