சென்னை--திருச்சிக்கு 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பஸ் ஊழியர் வேலை நிறுத்தம் மற்றும் தீபாவளி கூட்ட நெரிசல் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையிலிருந்துதிருச்சிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
திருச்சிக்கு, தாம்பரத்திலிருந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு
ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும தீபாவளி கூட்ட நெரிசல் ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக இந்தச் சிறப்புரயில்கள் விடப்படுகின்றன.
பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications