ஒரு நாள் ஸ்டிரைக் நடத்தும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போனஸ் கேட்டு தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மற்ற துறை ஊழியர்கள் போலவே, 20 சதவிகித போனஸ் கேட்டு கூட்டுறவுவங்கி ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
அடையாள வேலை நிறுத்தமாக இன்று ஒரு நாள் மட்டுமே இப்போராட்டம் நடைபெறும் என்று கூட்டுறவு வங்கிஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இன்று ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவேஇருந்தது.












Click it and Unblock the Notifications