பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: திமுகதான் காரணம் - பன்னீர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திமுகவின் தூண்டுதலின் பேரில்தான்நடக்கிறது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு வழங்கும் போனசைப் பொறுத்தவரை, பல்வேறு துறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் அதைநிர்ணயம் செய்கிறோம்.

தமிழக உணவுக் கழகம்தான் மக்களுக்கு அதிகம் சேவையாற்றும் துறை. ஆனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்குஅளிக்கப்படும் போனஸ்தான் வழங்கப்படுகிறது.

இதனால் தற்போதைய நிதி நிலையின்படி அதிகமான தொகையை போனசாகக் கொடுக்க முடியாது. இதுதான்உண்மை.

கிடைக்கிற லாபத்தை வைத்துத்தான் போனஸ் தருகிறோம். ஆனால் போக்குவரத்துக் கழகங்கள் பெருத்தநஷ்டத்தில் இயங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனாலும் சட்டபூர்வமாக அவர்களுக்கும் போனஸ் தர முன் வந்துள்ளோம்.

இதையெல்லாம் பார்க்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மேலும் தூண்டிக் கொண்டிருக்கிறது திமுக.இப்பிரச்சினையை அரசியலாக்கவே அக்கட்சி முயன்று வருகிறது. திமுகவுக்குத்தான் இது கைவந்த கலையாயிற்றே.

ஆனால் மற்ற கட்சிகள் இப்பிரச்சினையை அரசியலாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு உள்ளதுஎன்றார் பன்னீர்செல்வம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+