சிறைகளில் தீபாவளி கொண்டாடும் பஸ் ஊழியர்கள்?
சென்னை:
தமிழகம், ஏன் நாடு முழுவதுமே மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது,வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மறியல் செய்து கைதாகியிருக்கும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழகஊழியர்கள் தீபாவளியன்று சிறைகளில் வாட வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து சுமார் 10 ஆயிரம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுசிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இரண்டு மடங்குக்கும்அதிகமாக சிறைக் கைதிகள் இருப்பதால், இவர்களுக்குச் சாப்பாடு வழங்குவது சிறை அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக உள்ளது.
தீபாவளியன்று சிறைக் கைதிகளுக்கு பிரியாணி, இனிப்புகள் வழங்குவது சில தன்னார்வத் தொண்டுஅமைப்புகளின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதிலும் சிக்கல் வந்து விட்டது.
சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிவதால் அனைவருக்கும் பிரியாணி, இனிப்புகள் கொடுக்க இயலாது என்றுதன்னார்வத் தொண்டு அமைப்புகள் தெரிவித்து விட்டன. எனவே வழக்கமான சாப்பாடுதான் தீபாவளியன்றும்கைதிகளுக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.
சிறையில் உள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எப்போதுதான் வெளியே வருவார்களோ என்றுஅவர்களுடைய குடும்பத்தினர் சிறைகளின் வாசலில் தவம் கிடக்கின்றனர்.
அவர்களுடைய குடும்பத்தினரும் தற்போது தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications