பஸ் ஸ்டிரைக்: தொழிற் சங்கத்தினருடன் முதல்வர் பேச்சு
சென்னை:
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன்முதல்வர் பன்னீர் செல்வம் வியாழக்கிழமை பேச்சு நடத்தினார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஸ்டிரைக் வலுத்து வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்துதொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் பன்னீர் செல்வம் வியாழக்கிழமை காலை பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் அமைச்சர்கள்பொன்னையன், நைனார் நாகேந்திரன், தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் பேசுகையில், பிற்பகலில் போக்குவரத்து அமைச்சர் நைனார்நாகேந்திரன், தொழிற்சங்கப் பிரதிநதிகளுடன் மீண்டும் பேச்சு நடத்துவார்.
அரசின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதன் காரணமாகவே தொழிலாளர்கள் கேட்ட தொகையைத் தர முடியவில்லை.இப்போதைய நிலையில் 8.33 சதவீதத்திற்கும் மேல் தர இயலாத நிலை உள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீத பேருந்துகள்இயக்கப்படுகின்றன என்றார்.
போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினருடன் இதுவரை போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரன் மட்டுமே பேச்சு நடத்திவந்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியைடந்தன.
இப்போது தான் முதன் முதலாக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications