பழங்குடியினரிடம் அடி வாங்கும் தலிபான்கள்
காண்டஹார்:
தலிபான்களின் தலைமையகமான காண்டஹாரைப் பிடிக்க பழங்குடி இனப் படைகள் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றன.
நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளும் காண்டஹாரைத் தாக்க முன்னேறி வருகின்றன.
தலிபான் அமைப்பு உருவான இடம் காண்டஹார் தான். இங்கு தான் தலிபான் தலைவர் முல்லா முகம்மத் ஒமர்தனது தலைமையகத்தை வைத்திருந்தார். இந்த நகரின் அருகில் உள்ள பெரிய குகையில் தான் ஒமர்மறைந்திருருப்பதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் வட பகுதியில் இருந்து ஓடி வந்துவிட்ட ஆயிரக்கணக்கான தலிபான் வீரர்கள் காண்டஹாரைக் காக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தப் பகுதியை இழந்தாலும் காண்டஹாரை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனதலிபான்கள் சூளுரைத்துள்ளனர்.
ஆனால், தலிபான்களின் வீழ்ச்சியை பயன்படுத்தி காண்டஹாரைப் பிடித்துவிட பல ஆதிவாசிப் படைகள் கடும்தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன.
ஆதிவாசிகளைத் தூண்டி வரும் அமெரிக்கத் தூதர்:
இந் நகரின் விமான நிலையத்தை பழங்குடிப் படையினர் பிடித்துவிட்டதாக அமெரிக்கத் தூதராகஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய் புகுந்துள்ள ஹமித் கர்சாய் தெரிவித்துள்ளார்.
இந்த பழங்குடிப் படைகளுக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் உதவி வருவதாகவும் அந்த நகரமே பெரும் குழப்பத்தில்இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு உள்ளே நுழைந்த கர்சாய் அங்குதலிபான்களுக்கு எதிராக பழங்குடியினரைத் தூண்டிவிட்டு போர் தொடுக்கச் செய்து வருகிறார். இவரதுமுயற்சிகளுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது.
இழந்ததைப் பிடித்த தலிபான்கள்:
இந்தப் பழங்குடியினர் தலிபான்களிடமிருந்து உருஸ்காம் என்ற மாகாணத்தை நேற்று கைப்பற்றினர்.
இந்த மாகாணம் தான் முல்லா ஒமரின் சொந்த ஊர் அடங்கிய பகுதியாகும். இந்த மாகாணத்தின் தலைநகரானதிரின்கோட் நேற்று பழங்குடியினர் வசம் வந்தது.
ஆனால், தலிபான்கள் பெரும் பதிலடித் தாக்குதல் நடத்தி இந்த மாகாணத்தை மீட்டுவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications