தமிழகத்துக்குத் தண்ணீர் தர கேரளம் மறுப்பு
திருவனந்தபுரம்:
தமிழ்நாட்டில் கட்டப்பட்டுவரும் மேக்கரா அணைக்கு அச்சங்கோவில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து தண்ணீர் தரமுடியாது என்று கேரள முதல்வர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் செங்கோட்டைக்கு அருகே மேக்காரா என்ற புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணைக்குகேரளாவில் ஓடும் அச்சங்கோவில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து நீரைத் திருப்பிவிட கேரள அரசின்அனுமதியை தேசிய நீர்வளர்ச்சி ஆணையத்தின் மூலம் தமிழக அரசு கேட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கேரள முதல்வர் அந்தோனி அம்மாநில சட்டசபையில் கூறினார். அர்கூறுகையில்,
தமிழ்நாட்டில் ஓடும் ஹனுமன் நதிக்குக் குறுக்கே செங்கோட்டைக்கு அருகில் மேக்காரா என்ற அணை கட்டப்பட்டுவருகிறது. இந்த அனைக்கு அச்சங்கோயில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து டனல் மூலமாக நீரை எடுத்துச் செல்லதேசிய நீர்வளர்ச்சி ஆணையம் நம்மிடம் அனுமதி கேட்டது.
இதற்கு கேரள அரசு சார்பில் தண்ணீர் தர முடியாது என்று அரசு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அணை தமிழ்நாட்டின் எல்லைக்குள் கட்டப்பட்டு வருவதால், நாம் அதில் தலையிட முடியாது.
மேலும் கிரியாறு திட்டம் தொடர்பாக நமது மாநில எல்லைக்குள் சர்வே நடத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின்கோரிக்கையையும் அரசு நிராகரித்துள்ளது.
மேக்காரா அணை விவகாரம் குறித்த விவாதிக்க தேசிய நீர்வளர்ச்சி ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்கேரளவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. இதுறித்து விசாரணை செய்யப்படும்.
இவ்வாறு அந்தோனி சட்டசபையில் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications