தலிபான்களின் தோல்வி: இந்தியா பெரும் மகிழ்ச்சி
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, நன்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என இந்தியாகூறியுள்ளது.
மத ஒற்றுமை குறித்து டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் வாஜ்பாய் கூறுகையில்,
தீமையை நன்மை வென்றுள்ளது. மதத்தின் பெயரால் காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டி விட்டு வரும்பாகிஸ்தானுக்கும் அவர்களுடன் சேர்ந்து தீவிரவாதத்தைத் தூணடிய தலிபான்களுக்கும் இது பெரும்தோல்வியாகும்.
மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகத் தான் தங்கள் தீவிரவாதிகள் தங்கள் செயல்களுக்கு புனிதப் போர் என்றுபெயரிட்டுக் கொள்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு மதமே கிடையாது. மனித உயிர்களை மதிக்கும்படி தான் எல்லாமதங்களும் சொல்கினறன.
தீபாவளியை ஒட்டி ஆப்கானிஸ்தானிலும் ஒளி பரவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கு மக்களின்இருண்ட காலம் அகன்று வருகிறது. தலிபான்கள் ஒவ்வொரு நகராக இழந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். முதலில் நமதுவாழ்த்துக்களை அந்த மக்களுக்கு தெரிவிப்போம் என்றார் வாஜ்பாய்.
நிகழ்ச்சியில் தலாய் லாமா உள்பட இந்து, புத்த, ஜெயின், யூத மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications