தமிழக அரசின் நிதி நிலைமைக்கு நிர்வாகத் திறமையின்மையே காரணம்- பிரதமர் தாக்கு
டெல்லி:
சில மாநிலங்களின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதற்கு அம் மாநில அரசுகளின் நிர்வாகத்திறமையின்மையே காரணம் என பிரதமர் வாஜ்பாய்குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டுமிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தின் கஜானா சுத்தமாக உள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரக் கூட பணம் இல்லை. கடந்தமாதம் ரிசர்வ் வங்கியின் உதவியுடன் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்பட்டது.
இந் நிலையில் தான் தீபாவளி வந்தது. வழக்கம்போல் தீபாவளி அட்வான்சும், தீபாவளி போனசும் கிடைக்கும்எனக் காத்திருந்த அரசு ஊழியர்களின் நினைப்பில் மண் விழுந்தது.
தீபாவளி அட்வான்ஸ் கிடையாது என்று கூறிய தமிழக அரசு போனசையும் மூன்றில் ஒரு பங்காக குறைத்தது.இன்று வரை பல துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தான் இன்று டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மாநில அரசுகளின் நிதி நிலைமைகுறித்து பிரதமர் வாஜ்பாய் கவலை தெரிவித்துப் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்.
வாஜ்பாய் கூறுகையில், மாநில அரசுகள் தங்கள் நிதிநிலைமையை சீர்செய்து கொள்ள சுயமாக முயற்சிகளைமேற்கொள்ள வேண்டும். சில மாநிலங்கள் தங்கள் நிதி நிலைமை குறித்து மத்திய அரசுடன் கலந்துஆலோசிப்பதில்லை.
இந்த மாநிலங்கள் தங்கள் நிதி நிலைமையைச் சீர் செய்ய மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைஎதிர்பார்க்கின்றன.
இது அம் மாநிலத்தின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஆதாரத்தையேபாதிக்கும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications