பாகிஸ்தானுக்குள் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுகள் வந்துவிழுந்தன.
2 குண்டுகள் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் குர்ராம் பகுதியில் குண்டுகள் நேற்றிரவு விழுந்தன. மேலும் 2குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்காணிப்புக் கூடாரங்கள் மீது விழுந்தன.
பாகிஸ்தான் மீது அமெரிக்க குண்டுகள் விழுவது இதுவே முதல் முறையாகும்.
இந் நிலையில் எல்லையில் பாதுகாப்பு குறித்து விவாதிக்க உயர் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று கூட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications