த.மா.கா. உடைகிறது: காங்கிரசுக்குத் தாவும் தலைவர்கள்
சென்னை:
சென்னையில் வரும் 19ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள முப்பெரும் விழாவின்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பல முன்னணி நிர்வாகிகள் காங்கிரஸில் சேரவுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அக்கட்சி தள்ளாட்டத்தில் உள்ளது. கட்சித் தலைவராகபொறுப்பேற்றுள்ள கோவிந்தவாசனின் செயல்பாடுகள் கட்சியின் பல முன்னணித் தலைவர்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ளது.
இதே நிலையில் கட்சி சென்று கொண்டிருந்தால் விரைவிலேயே அது அழிந்து விடும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
எனவே காங்கிரஸ் கட்சியில் சேர பல தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் மத்திய பெண் அமைச்சர் ஒருவரின்தலைமையில் இவர்கள் அணி திரண்டுள்ளனர். விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இவர்கள்காங்கிரஸில் சேர முடிவெடுத்துள்ளனர்.
வரும் 19ம் தேதி காங்கிரஸ் கட்சி முப்பெரும் விழாவை நடத்தவுள்ளது. இந்த விழாவின்போது பல த.மா.கா. நிர்வாகிகள்காங்கிரஸில் சேருகின்றனர். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ் நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளருமானரமேஷ் சென்னிதாலா இந்த விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவையடுத்து முன்னணித் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சோனியா முன்னிலையில் சேருகின்றனர். இந்த சேர்க்கைவைபவம் குறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமாகவிலுள்ள ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். முதல் கட்டமாக சென்னைமாவட்ட தமாகா நிர்வாகிகள் பலர் காங்கிரஸில் சேருகிறார்கள். விரைவில் தமாகா கலைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில்இணைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications