அரசு பஸ்களை தனியார் மயமாக்க கி.வீரமணி கோரிக்கை
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக்கி, அரசு பஸ்களை தனியார் மயமாக்க வேண்டும் என்றுதிராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியிருப்பதாவது,
அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், இந்த ஆண்டு ரூ. 2,035 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும்போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகிறார். இதேபோல கடந்த ஆட்சியிலும் நஷ்டக் கணக்குதான் காட்டப்பட்டது.
தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபத்தில் ஓடும்போது, அரசு பஸ்கள் மட்டும் நஷ்டத்தில் ஏன் இயங்கவேண்டும் என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி.
இதற்கு ஒரு முடிவு காணும் பொருட்டு, அதிமுக அரசு துணிச்சலுடன் பஸ்கள் அரசுடமை திட்டத்தைப் பற்றி மாற்றுமுடிவு எடுக்க வேண்டும்.
இதை அரசு நடத்துவதை நிறுத்திவிட்டு தனியார்களுக்கு விதிப்பதைப் போல பஸ் சீட்டுக்களின் எண்ணிக்கையைக்கணக்கிட்டு வரிவிதித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.
தனியார் மயம் என்று அதிக லாபம் தரும் துறைகளைக் கூட மத்திய அரசு அடிமாட்டு விலைக்கு தனியாருக்குவிற்றுவிடுகிறது. தமிழக அதிமுக அரசு அப்படிச் செய்யாமல் பஸ் தொழிலாளர்களையே முதலாளியாக்கும்திட்டத்தை திறந்த முறையில் அறிவிக்கலாம்.
அவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் 3 முதல் 5 பஸ்களை அளிக்கலாம். அவர்களுக்கு ஏதுமூலதனம் என்ற கேள்வி எழுமானால், தேசியமயமான வங்கிகள் இப்போது எப்படி பஸ்கள் மீது தனியாருக்குகுறைந்த வட்டி விகிதத்திற்கு முன்பணம் கடனாகத் தருகிறார்களோ, அதே முறையைத் திட்டமிட்டு பின்பற்றச்செய்யலாம்.
தற்போது தனியார் துறையில் பஸ்கள் இல்லையா?. அவை லாபகரமாக இயங்கும்போது, இப்படி "புலிவால் பிடித்தநாயர் " கதைபோல தமிழ்நாடு அரசும் திணற வேண்டுமா?.
ஊழல், வழக்கு, சங்கடங்கள் எதுவுமே வராது. ஆம்னி பஸ்கள் ஏராளம் ஓடுகின்றன. மினி பஸ்கள் திமுக ஆட்சியில்ஏராளம் அனுமதி கொடுத்து ஓடிக்கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதியையும் நாட்டுடமை ஆக்குவதில் என்னதவறு?
அரசு பஸ்களை தனியாருக்கு மாற்ற முடிவெடுக்கும் துணிவுடன் அதிமுக தலைமையும் அரசும் வரவேண்டும். அரசுபோக்குவரத்துத் துறையில் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதைவிட பங்காளி-முதலாளி ஆக்குவது தவறல்ல-பிற்போக்காகாது.
இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications