பின்லேடனின் முக்கிய கூட்டாளி சாவு
Subscribe to Oneindia Tamil
காபூல்:
இரு தினங்களுக்கு காபூல் மீது அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பின் லேடனின் நெருங்கிய நண்பரும், அல்-காய்தா அமைப்பின் முக்கியத்தளபதியுமான முகம்மத் அதீப் பலியானார்.
பின்லேடனின் உதவியாளராகவும், அவரது அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியாகவும் இருந்தவர் முகமது அடெப். இவர் அந்தஇயக்கத்தின் நிதி நிர்வாகத்தையும் துறையையும் கவனித்து வந்தார்.
அமெரிக்கா மீதான தாக்குதலை திட்டமிட்டதில் இவருக்கு மிக முக்கிய பங்குள்ளதாகக் கருதப்படுகிறது. இவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன்டாலர் விலை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காபூல் அருகே விமானத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி இன்று வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications