உண்ணாவிரதம் இருக்க பஸ் ஊழியர்கள் முடிவு
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகபோக்குவரத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 8 நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் தமிழகத்தில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தனது நிலையில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் திங்கள்கிழமை முதல்உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் இன்று (சனிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த எட்டு நாட்களாக நாங்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில்நேற்று எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்,பழையபடி 8.33 சதவீத போனஸ்தான் தரமுடியும் என்று கூறுகிறார்.
இதைச் சொல்வதற்கு அவர் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. தமிழகஅரசு எங்களைத் திட்டமிட்டு அவமதித்து, கேவலப்படுத்தி, வெறுப்பேற்ற வேண்டும் எண்ணத்தில் தான் இவ்வாறுசெய்து வருகிறது.
எங்களுக்கு 98 சதவீத போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் ஆதரவு அளித்துவருகின்றனர். தமிழக அரசு தனதுநிலையில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் வரும் திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில்இறங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications