இ-மெயில் மிரட்டல்: பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் கைது
பெங்களூர்:
தான் வேலை பார்க்கும் கம்பெனியின் இ-மெயில் சர்வரைச் சிதைத்து விடப் போவதாக இ-மெயில் மூலம் மிரட்டல்விடுத்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை சைபர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் குளோபல் சொலுசன்ஸ் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்துவருபவர் கே.ஆர். விஜயகுமார். இக்கம்பெனியின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது.
இந்தியாவில் உள்ள அலுவலகத்தின் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் அனைத்தையும் விரைவில் முடக்கப் போவதாகவிஜயகுமார் அடிக்கடி அமெரிக்காவில் உள்ள அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பினார்.
தான் யாரென்று எந்த இ-மெயிலிலும் அவர் தெரிவிக்கவில்லை. மிரட்டல் இ-மெயில்களை மட்டும் தொடர்ந்துஅனுப்பி மிரட்டிக் கொண்டே இருந்தார்.
ஆனால் தலைமை அலுவலகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் திடீரென்று அமெரிக்காவில் உள்ளஇக்கம்பெனியின் இ-மெயில் சர்வர் முடங்கிப் போனதும்தான் அவர்களுக்கு உரைத்திருக்கிறது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள சைபர் போலீசாரிடம் (சாப்ட்வேர் குற்றங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளபோலீசார்) இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும் பீனிக்ஸ் குளோபல் கம்பெனிக்கு வந்த மிரட்டல் இ-மெயில்களை வைத்து, விஜயகுமாரைப் பிடித்துவிட்டனர். பெங்களூரில் உள்ள பல்வேறு இ-மெயில் பிரவுசிங் சென்டர்களிலிருந்துதான் இவர் இந்த இ-மெயில்மிரட்டல்களை விடுத்திருந்ததும் தெரிய வந்தது.
அவற்றில் ஒரு பிரவுசிங் சென்டரைக் கண்டுபிடித்த சைபர் போலீசார், ஓரிரு நாட்களிலேயே விஜயகுமாரையும்பிடித்து விட்டனர்.
கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கீ-போர்டைத் தட்ட வேண்டிய விஜயகுமாரின் கைகள், தற்போது கம்பிஎண்ணிக் கொண்டிருக்கின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications