திருவண்ணாமலை தீபத் திருவிழா நாளை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புகழ் பெற்ற கார்த்திகை தீப திருவிழா ஞாயிற்றுக்கிழமைதுவங்குகிறது.
திருவண்ணாமலை தீபம் என்றும் பெரிய தீபம் என்று அழைக்கப்படும் தீபத் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். கார்த்திகைமாதத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீபத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதுவழக்கம்.
இந்த ஆண்டு தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 4ம் தேதி வரை இந்த விழாநடக்கிறது. வருகிற 30ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். ஏழு அடி உயர கொப்பரையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்படும்.
இதற்காக 600 கிலோ நெய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications