குதிரைகளில் சென்று தாக்கும் அமெரிக்க வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் சேர்ந்து அமெரிக்க சிறப்புப் படை வீரர்களும் ஆப்கானிஸ்தானில் போர்புரிந்து வருகின்றனர்.
அதே போல முதல்முறையாக காண்டஹாரில் தலிபான்களின் முக்கியத் தலைவர்களின் வீடுகளைக் குறி வைத்துஅமெரிக்க விமானங்கள் தாக்க ஆரம்பித்துள்ளன.
முதலில் தலிபான் படைகள், ராணுவ கேந்திரங்கள், ராணுவ வாகனங்களைத் தாக்கி வந்த விமானங்கள் இப்போதுநார்த்தர்ன் அலையன்ஸ் தந்து வரும் ரகசிய தகவல்களை வைத்து முக்கியத் தலைவர்களின் பதுங்குமிடங்களைதாக்க ஆரம்பித்துள்ளன.
90 சதவீத நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தலிபான்களிடம் இப்போது 30 சதவீத நாடு கூட இல்லை.காண்டஹார் தவிர முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications