தாற்காலிக டிரைவருக்கு திருவண்ணாமலை மாணவன் பலி
திருவண்ணாமலை:
அரசு பஸ்களைத் தற்போது இயக்கிவரும் தற்காலிக டிரைவர் ஒருவர் திருவண்ணாமலை அருகே ஒரு பள்ளிமாணவன் மீது பஸ்ஸை ஏற்றி அவனது உயிரைப் பறித்தார். கடந்த ஒரு வாரத்தில் இது தற்காலிக டிரைவர்களால்ஏற்படும் 5வது விபத்தாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்யியில் 10-ம் வகுப்புப் படித்து வரும்மாணவன் மணிகண்டன். இவர் கடந்த வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆரணி ஆற்காடு சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த அரசு பஸ் மணிகண்டன் மீது பயங்கரமாகமோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன், பஸ்டிரைவர் ராஜேந்திரனையும் அடித்து உதைத்தனர்.
இவர் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டடிரைவர் ஆவார்.
மேலும் பஸ் டிரைவரை அடித்து உதைத்துவிட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்துத் தகவல்அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் பொதுமக்கள் ஆத்திரம் தாங்காமல் போலீசார் மீதும் கல்வீச்சு நடத்தினர். பிறகு போலீசார் தடியடி நடத்திக்கூட்டத்தைக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications