த.மா.கவை உடைக்கும் காங்கிரஸ்: வாசன் அப்செட்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதால் தமாகாதலைவர் ஜி.கே.வாசன் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
மூப்பனாரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அவரது மறைவுக்குப் பின் அப்படியேஸ்தம்பித்துப் போய் உள்ளது. கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் யாருக்கும் இந்தக் கட்சியில் நீடிக்க மனமில்லை.
கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடலாம் என்று பல தலைவர்கள் கூறி வருகின்றனர். சிலதலைவர்கள் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தலாம் என்று கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை வற்புறுத்திவருகின்றனர்.
இந் நிலையில் முன்னாள் மத்திய பெண் அமைச்சர் ஒருவரது தலைமையில் மிகப் பெரிய கூட்டமே தமாகாவைவிட்டு விலகப் போகின்றன. இதற்கு முன்னோட்டமாக வரும் 19ம் தேதி தமாகாவைச் சேர்ந்த சில முக்கியநிர்வாகிகள் காங்கிரஸில் சேரவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் விரைவில்தமாகா, காங்கிரஸில் வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தமாகா தலைவர் வாசனை மிகவும் அப்செட் செய்துள்ளதாகத் தெரிகிறது. தங்களது தன்மானத்தைஇளங்கோவன் வம்புக்கு இழுப்பதாக அவர் நினைக்கிறார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் அவர் பேசியிருப்பதாகவும்,அப்போது கட்சியை உடைக்கும் வேலையில் இளங்கோவன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதைத் தடுத்துநிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படவே விரும்புகிறோம் என்று வாசன்கூறியதாக தெரிகிறது.
இதற்கு சோனியா தரப்பில் என்ன கூறப்பட்டது என்று தெரியவில்லை.
இதற்கிடையே அடுத்த வாரம் வாசன் டெல்லி செல்லவிருக்கிறார். அப்போது சோனியாவை நேரில் சந்தித்து கட்சிஉடைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications