வீரப்பன் சரணடையத் தயார்: கேசட் அனுப்பினான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக்கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புவதாக நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழுக்கு அனுப்பியுள்ளஆடியோ கேசட்டில் தெரிவித்துள்ளான்.

காட்டிற்குள் மறைந்து வாழும் வீரப்பனைப் பிடிக்க முன்னாள் தமிழகக் காவல்துறைத் தலைவர் தேவாரம்தலைமையில் அதிரடிப்படையினர் இரவுபகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்ணில்சிக்காமல் தப்பித்துவந்த வீரப்பன் தற்போது தமிழக அரசிடம் சரணடைய விரும்புவதாகவும், அதுகுறித்துப்பேச்சுவார்த்தை நடத்த அரசு தூதரை அனுப்புமாறும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஒரு கேசட்அனுப்பியுள்ளான்.

இந்தக் கேசட் கடந்த 7ம் தேதி வீரப்பனின் ரகசியத்தூதர் ஒருவர் மூலமாக தனக்குக் கிடைத்ததாக நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

வீரப்பனிடம் இருந்து வந்த இந்த ஆடியோ கேசட் எனக்கு கடந்த 7ம் தேதி கிடைத்தது. அதில் வீரப்பன்கூறியிருந்தபடி நான் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கடந்த 9ம் தேதி தந்தி அனுப்பியுள்ளேன் என்றார்.

அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியிருப்பதாவது,

நான் தமிழக அரசிடம் சரணடையலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு முன்பாக தமிழக அரசும் கர்நாடகஅரசும் காட்டுக்குள் என்னைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையை காட்டை விட்டு வெளியேறஉத்தரவிட வேண்டும்.

நான் சரணடைவது குறித்த என்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மணியுடன், அவருக்கு நம்பிக்கையானஒரு ஆளைத் தூதராக அனுப்பலாம். என்னுடன் பேச வரும் தூதர்களை நான் பிடித்து வைத்துக் கொள்வேன் என்றுயாரும் பயப்பட வேண்டாம். அவ்வாறு என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் வர வேண்டாம்.

ஆசிரியர் மணி இந்தக் கேசட்டை எடுத்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் போட்டுக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் தூதர்களிடம் நான் எனது வேண்டுகோள்களைத் தெரிவிப்பேன்.

நான் இந்த முறை ஆசிரியர் மணியைத் தூதராகத் தேர்ந்தெடுத்திருப்பதற்குக் காரணம், நக்கீரன் ஆசிரியர்கோபால் மீதும் அவருடன் வந்த நிருபர் சுப்ரமணியம் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால்தான்.

இவ்வாறு வீரப்பன் அந்தக் கேசட்டில் கூறியுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+