வீரப்பனின் புகார் நம்பும்படியாக இல்லை: நக்கீரன் கோபால் கூறுகிறார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாக கூறப்படும் கேசட்டில் நக்கீரன் பத்திரிக்கை குறித்தும், தன்னைக் குறித்தும் வீரப்பன் கூறியுள்ளகுற்றச்சாட்டுக்கள் நம்பும்படியாக இல்லை என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாக ஒரு ஆடியோ கேசட்டை நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மணி சமீபத்தில் வெளியிட்டார்.அந்த கேசட்டில், தான் சரணடைய விரும்புவதாக வீரப்பன் கூறியுள்ளான். மேலும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் குறித்தும் சிலகருத்துக்களைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நக்கீரன் கோபால் அறிக்கையொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் இது வீரப்பன் அனுப்பிய கேசட்தானா என்பதிலேயே எங்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், வீரப்பன் விவகாரத்தைமனிதாபிமான நோக்கோடு முதன் முதலாக அணுகியவர்கள் நாங்கள்தான்.
வீரப்பன் எங்களை ஆள்காட்டி என்று கேசட்டில் கூறியுள்ளதாக அறிகிறோம். இந்த வார்த்தை மிகவும் கடுமையான ஒன்று என்பதால் இந்தவிளக்கத்தை அளிக்க வேண்டியதாயிற்று.
தற்போது இந்த கேள்விகளை மக்கள் முன்பும், வீரப்பன் முன்பும் வைக்கிறோம்.
- 1.அதிரடிப்படையினரால் அப்பாவி கிராமத்து மக்கள் சித்திரவதை செய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொலை செய்யப்பட்டது ஆகியவற்றை மனித உரிமை கமிஷனிடம் எடுத்துச் சென்றது நாங்கள். எனவே எங்களைப் பார்த்து வீரப்பன் புகார் கூறியிருப்பதை யாராவது நம்ப முடியுமா?
2.வீரப்பன் குறித்து என்னவெல்லாமோ கருத்து வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் முதன் முதலில் அவனை நேரில் சந்தித்து, அவனது கருத்துக்களை வெளியிட்டு, பொது மன்னிப்பு மூலம் மட்டுமே வீரப்பனை சாதாரண மனிதனாக்க முடியும் என்று அரசுக்கு விளக்கியதை வீரப்பனால் மறுக்க முடியுமா?
3. நாங்கள் ஒவ்வொரு முறையும் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் செல்லும்போது அதிரடிப்படை போலீஸார் எங்களைப் பின் தொடரக்கூடாது என்று கூறியதற்குப் பெயர்தான் ஆள்காட்டி வேலையா?
4. கர்நாடக வனத்துறையினர் கடத்தப்பட்டபோது அவர்களை பத்திரமாக மீட்டு வந்தது நாங்கள்தான். அந்த வனத்துறையினர் கூட நம்பமாட்டார்கள், வீரப்பன் கேசட்டில் கூறியதாக கூறப்படுவதை.
எது எப்படியிருப்பினும், வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும்என்று கூறியுள்ளார் கோபால்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications