தமிழகத்தில் 3 இளைஞர்கள் கைது: அல்-காய்தா அமைப்பினரா?

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

டெலிபோன் அதிகாரிகள் துணையுடன் ஐ.எஸ்.டி. வசதி இல்லாமல், லோக்கல் தொலைபேசியை வைத்துக்கொண்டே ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கருதப்படும் மூன்று பேரைபெரம்பலூரில் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெரம்பலூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில்தொழில்நுட்ப உதவியாளராக வேலை செய்கிறார்.

இவருடைய மகன் சபரீஷுக்கும் ஊட்டியில் உள்ள சில வித்தியாசமான முஸ்லீம் இளைஞர்களுக்கும் தொடர்புஏற்பட்டது. உல்லாசமாக இருப்பதற்காக சபரீஷுக்குத் தேவையானதை எல்லாம் அந்த இளைஞர்கள் செய்துகொடுத்துள்ளனர். சபரீஷின் தந்தை டெலிபோன் துறையில் வேலை பார்ப்பதால் தான் அவருடன் இந்தஇளைஞர்கள் பழகியுள்ளனர்.

பெரம்பலூரில் தங்களுக்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்தும் தருமாறும், செல்வராஜ் மூலம் டெலிபோன்இணைப்பு வாங்கித் தருமாறும், பெரம்பலூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்குள் நுழைவதற்கு அனுமதி வாங்கித்தருமாறும் சபரீஷை அந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர்.

முதலில் சம்மதித்த சபரீஷ், அந்த இளைஞர்களில் ஒருவரான அப்துல் ரஹீமின் (30) தொந்தரவு காரணமாக பயந்துபோய், தந்தையிடம் இது பற்றிக் கூறியுள்ளார்.

இதையடுத்து, செல்வராஜ் பெரம்பலூர் போலீசாரிடம் புகார் செய்தார்.

இது குறித்து காலைக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி:

பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சபரீஷ் உதவியுடன் பெரம்பலூரில் தங்கியிருந்த அப்துல்ரஹீமை கைது செய்தனர்.

இவர் உதவியுடன் அவருடைய இரண்டு நண்பர்களான இஸ்மாயில் என்ற போஜி (35) மற்றும் காஜா உசேன் (20)ஊட்டியிலிருந்து வரவழைத்து, அவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்த மூவருமே கேரளாவைச்சேர்ந்தவர்கள்.

ஐ.எஸ்.டி. தொடர்புக்கான கம்ப்யூட்டர் கருவிகளை உள்ளூர் தொலைபேசி வசதியுடைய டெலிபோனில் இணைத்துஇவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மூலமாகத்தான் இந்த டெலிபோன் தொடர்பை அவர்கள்வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சேரம்பாடி டெலிபோன் சப்-டிவிஷனல் அதிகாரியான ராமகிருஷ்ணன், என்ஜினியர் சுகுமார்மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் முரளி ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர்.

இவர்கள் உதவியுடன்தான் அந்த முஸ்லீம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஐ.எஸ்.டி. வசதி இல்லாமலேயேதொடர்பு வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகளுடன் தொடர்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில குழுக்களுக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உ.ள்ளதீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.டி. மூலம் பேசினால் தொடர்பு எண் வெளியே தெரிந்துவிடும் என்பதால், உள்ளூர் தொலைபேசிமூலமாகவே இணைப்பு ஏற்படுத்தி வெளி நாடுகளுக்கு போன் போட்டு இக்குழுக்கள் பேசியுள்ளன.

இதற்காக இக்குழுக்கள் டெலிபோன் அதிகாரிகளுக்கு பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்துள்ளன.

தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை

நீலகிரி மற்றும் பெரம்பலூரில் இவர்களுடைய சதித் திட்டம் அம்பலமாகியுள்ளதால், தமிழகத்தின் வேறு பலஇடங்களிலும் இவர்கள் இதுபோன்ற சதித் திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+