இளம்பெண் விவகாரம்: ஹோட்டல் சரவண பவன் அதிபர் தலைமறைவு
சென்னை:
தன்னை 3வது திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண்ணை மிரட்டி.ய ஹோட்டல் சரவணபவன் அதிபர்தலைமறைவாகிவிட்டார். இவரைப் பிடிக்க சிறப்புப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர் மீது மிரட்டல் புகார் கொடுத்த பெண்ணையும் அவரது கணவரையும் காணவில்லை. இவர்கள் உயிருக்குஅஞ்சி தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் பிரபலமான ஹோட்டல் சரவணபவன். பல இடங்களில் இதற்குக் கிளைகள் உள்ளன. இந்தஹோட்டல்களை நடத்தி வருபர் ராஜகோபால்.
இவர் மீது ஜீவஜோதி என்ற இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர். இவரதுகணவர் பெயர் பிரின்ஸ் சாந்தகுமார்.
ஜீவஜோதி போலீசில் கொடுத்த புகாரில், கணவரை விரட்டி விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு சரவண பவன்அதிபர் ராஜகோபால் என்னை மிரட்டி வருகிறார். என்னை மூன்றாவது திருமணம் செய்து கொள்வதாகவும்கூறுகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் சரவணபவன் ஊழியர்கள் 5 பேரைக் கைது செய்தனர். ஆனால், ராஜகோபால்தலைமறைவாகிவிட்டார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எனவே, தூத்துக்குடியிலும் இவரைத் போலீசார்தேடுகின்றனர்.
இந் நிலையில் புகார் கொடுத்த ஜீவஜோதியையும் அவரது கணவர் பிரின்சையும் காணவில்லை. இவர்கள் உயிருக்குஅஞ்சி தலைமறைவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications