யார் இந்த ராஜகோபால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் குறித்துத் தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த ஹோட்டல்களை நிறுவியவரான ராஜகோபால்இப்போது செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். சென்னையில் முதன் முதலாக ஹோட்டல் சரவண பவன் என்ற பெயரில் ஹோட்டலை துவக்கினார். திருமுருககிருபானந்த வாரியாரின் தீவிர பக்தரான ராஜகோபால் வாரியார் உயிருடன் இருக்கும் வரை அவர் துவக்கி அனைத்து சரவண பவன் ஹோட்டல்களையும்,வார்யாரை வைத்தே திறந்தார்.

வாரியார் குறித்த பல புத்தகங்களை எழுதி அவற்றை தனது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இலவசமாகவும், விற்பனையும் செய்து வந்தார். பலகேசட்களையும் போட்டுள்ளார். தனது ஹோட்டல்களில் கடவுள் படங்களுக்கு இணையாக வாரியார் படங்களையும் வைத்திருப்பார்.

இத்தனை பக்தியான ஒரு நபர் மீது இவ்வளவு கீழ்த்தரமான புகார் கூறப்பட்டிருப்பது குறித்து தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப்புகார் உண்மையானதுதானா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் உண்டு.

ராஜகோபாலுக்கும், அவரது நிறுவனத்தின் பெயரில் அமைந்த வேறு ஒரு நிறுவன அதிபருக்கும் இடையே சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது. ராஜகோபாலின் வீட்டில் சம்பந்தம் செய்ய அந்த அதிபர் முயன்றுள்ளார். ஆனால் அதற்கு ராஜகோபால் மறுத்து விட்டார். இதனால்சதையும், ரத்தமுமாக இருந்து வந்த அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு சம்பந்தம் செய்ய ஆசைப்பட்டவர் நடத்திய நிறுவனமொன்றில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பெண்ணை கடைஊழியர்கள் மானபங்கப்படுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகி தமிழகத்தையே பரபரப்பாக்கின. இந்த சம்பவத்தையடுத்து அந்த நிறுவனத்தின் பெயர்ஓரளவு கெட்டது.

அதற்குப் பிறகு அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சிறுவர்கள், இளைஞர்கள் மாற்றப்பட்டு முற்றிலும் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் ராஜகோபால் இருந்ததாக ஒரு பேச்சு அப்போது எழுந்தது. ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில்ராஜகோபால் மீது தற்போது எழுந்துள்ள புகார், பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்குமோ என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கும் நம்பகமானபின்னணி இல்லை.

ராஜகோபால் விவகாரத்திற்கு வருவோம். சரவண பவன் என்ற பெயரில் சென்னையின் முக்கிய இடங்களில் ஹோட்டல்களை நிறுவிய ராஜகோபால் குறுகியகாலத்தில் பெரும் புகழைப் பெற்றார்.

தரமான, சுவையான உணவை கண்டிராத சென்னை மக்கள் சரவண பவனுக்குக் குவியத் தொடங்கினர். இதனால் ஹோட்டல் என்ற பெயரில் வெந்ததையும்வேகாததையும் மக்கள் வாயில் திணித்து வந்த பல முன்னணி ஹோட்டல்கள் வீழ்ச்சியடைந்தன. கடையை மூடிவிட்டு நடையைக் கட்டின.

ஆயிரம் விளக்குப் பகுதியில் மட்டும் மொத்தம் 5 பெரிய ஹோட்டல்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தன. இதனால் அவை அனைத்தும் தற்போதுமூடப்பட்டு விட்டன. இத்தனைக்கும், அவை பல ஆண்டுகளாக பயங்கர பிசியாகவும், புகழ் பெற்ற ஹோட்டல்களாகவும் இயங்கி வந்தவை என்பதுகுறிப்பிடத்தக்கது.

இத்தனை வேகமாக வளர்ந்த ராஜகோபால் காஞ்சிபுரம், திருத்தணி ஆகிய இடங்களிலும் தனது ஹோட்டல்களை விரிவுபடுத்தினார். சரவண பவன் என்ற பெயர்பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. ஹோட்டலின் பெயர் பெரிதாக பெரிதாக சாப்பாட்டின் தரம் குறையத் தொடங்கியது. விலையும் அதிகரிக்கத்தொடங்கியது. சுவையும், தரம் முன்பிருந்த அளவுக்கு இல்லை என்ற ஆதங்கம் எழத் தொடங்கியது.

சரவண பவன் ஹோட்டல்களின் நிர்வாகம் முழுக்க முழுக்க ராஜகோபால் கட்டுப்பாட்டில் இல்லை. அத்தனை ஹோட்டல்களையும் அவரால் முழுமையாககவனிக்க டியாது என்பதால் மேனேஜர்களை நியமித்துள்ளார். ஒவ்வொரு ஹோட்டலுக்கும் ஒரு மேனேஜர் உண்டு. அவர்தான் ஹோட்டல் நிர்வாகம்ழுவதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி வியாபாரம் குறித்து அன்றைய நாளின் இறுதியில் ராஜகோபாலிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இதுபோல மேனேஜராக இருந்தவர்தான் ராமசாமி. இவரது மகள்தான் ஜீவஜோதி. இவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஜீவஜோதியின் மீது ரொம்ப நாட்களாகவே ராஜகோபாலுக்கு கண் இருந்தது என்று கூறப்படுகிறது. அவரது வீடு வேளச்சேரி- தரமணிஇணைப்புச் சாலையில் உள்ளது. சாய் ராயல் ஆர்கேட் என்ற பெயரில் அமைந்துள்ள பிளாட்டில் 2வது தளத்தில் அவர் வசித்து வருகிறார்.

தற்போது ராஜகோபால் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஜீவஜோதியும் தற்போது வேதாரண்யம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரைத் தொடர்பு கொள்ள இந்த நிருபரால் முடியவில்லை. ஜீவஜோதிகுறித்துக் கேட்கப் போனால் அவரது வீட்டு உரிமையாளர் எதுவும் பேச மறுக்கிறார். தேவையில்லாமல், வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டுநாங்கள் முழிக்கிறோம் சார், இதை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை, தயவு செய்து போய் வாருங்கள் என்று பயத்துடன் கூறி அனுப்பி வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+