சரவண பவன் ராஜகோபால் நியாயஸ்தர் அல்ல... போலீஸ் கமிஷ்னர் பாய்ச்சல்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது கூறப்பட்ட புகார்கள் உண்மையானவை என்று தெரிந்த பின்பே அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது ஜீவஜோதியும், அவரதுகணவர் சாந்தகுமாரும் சேர்ந்து 39 பக்கங்கள் அடங்கிய புகாரை நேரடியாக என்னிடம் கொடுத்தனர். அந்தப் புகாரை படித்துப்பார்த்தவுடன் நாங்கள் ஆக்ஷனில் இறங்கி விடவில்லை. தெளிவாக விசாரித்து, புகார்களில் உண்மை இருந்தது தெரிய வந்தவுடன்தான்ராஜகோபால் மீது வழக்குப் பதிவு செய்தோம்.
ராஜகோபால் மீது பொய்யான வழக்கு எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. இவை அவர் மீது ஜோடிக்கப்பட்ட வழக்குகள் அல்ல.மேலும், ராஜகோபால் ஒன்றும் நியாயஸ்தர் அல்ல, இதுமாதிரி செய்வது அவருக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். தொழிலைப் போல இதைஅவர் செய்து வந்தார். தற்போது பிடிபட்டுள்ளார்.
ராஜகோபால் மீது கூறப்பட்ட புகார்களை வாபஸ் பெற வைக்க சரவண பவன் ஹோட்டல் தரப்பில் பல காரியங்கள் செய்யப்பட்டன. இதைக்கண்டு பயந்து போன ஜீவஜோதியும், சாந்தகுமாரும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர். அவர்களைத் தேடி சரவண கும்பல் அடியாட்களும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.அவர்களுடன் ராஜகோபாலும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதையறிந்த போலீஸார் சரவண பவன் கும்பலை வழிமறித்துப் பிடித்தனர். இதையறிந்த ராஜகோபால் வேறு ஊருக்கு சென்று தப்பி விட்டார்என்றார் அவர்.
இதற்கிடையே, முன் ஜாமீன் கேட்டு ராஜகோபால் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனுவில் தன்னிடம்ஜீவஜோதியும், அவரது கணவரும் கடன் கேட்டிருந்தனர். நானும் கொடுத்தேன். மீண்டும் கேட்டனர், ஆனால் கொடுக்க மறுத்ததால்பொய்யான புகாரை கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தன் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனவேகைதானால் ஜாமீனில் வருவதற்கு வசதியாக முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை வருகிறது.












Click it and Unblock the Notifications