வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பந்த்: திமுக ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை பஸ் போக்குவரத்து ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள பந்த்துக்கு திமுக,காங்கிரஸ் கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
தீபாவளி போனஸ் தொடர்பாக போரட்டம் நடத்தி வரும் பஸ் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன்உண்ணாவிரம், ஆர்ப்பாட்டம் ஆகிய நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதையடுத்து மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர். வரும் 23ம் தேதி நடத்த இருக்கும் தங்களின் இந்தப் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளின்ஆதரவையும் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியையும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனையும் டி.கே.ரங்கராஜன்தலைமையிலான போராட்டக் குழுவினர் இன்று நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
கருணாநிதி:
போராட்டத்துக்கு முழு ஆதரவு தருவதாக அவர்களிடம் கருணாநிதி உறுதியளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசியகருணாநிதி, தொழிலாளர்களுக்கு எப்போதுமே உதவும் கட்சி திமுக. இப்போது நிதி நிலை சரியில்லை என்றுசொல்லி போனஸை அரசு குறைத்திருப்பதை திமுக ஏற்காது. பஸ்களை ஓட்டினால் நிச்சயம் வருமானம் வரும். அதைவைத்து போனஸ் தரலாம்.
23ம் தேதி பந்துக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றார்.
காங்கிரஸ் தலைவருடன் சந்திப்பு:
முன்னதாக போராட்டக் குழுவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்துஆதரவு கேட்டனர். இதற்கு முழு ஆதரவு தருவதாக இளங்கோவன் கூறினார். நிருபர்களிடம் இளங்கோவன்பேசுகையில்,
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். சிறையில் இருக்கும் தொழிலாளர்களைவிடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். உடனடியாகப்பேசி இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். முழு அடைப்புக்கு எங்கள ஆதரவைத்தெரிவித்துள்ளோம் என்றார்.
பா.ம.க., மதிமுக ஆதரவு:
பின்னர் நிருபர்களிடம் பேசிய போராட்டக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறுகையில்,
போராட்டத்துக்கு மதிமுக தலைவர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் அவருடன் தொலைபேசியில்பேசினோம். ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணியிடம் பேசினோம். முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழுஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நிச்சயம் வெற்றிகரமாகநடக்கும் என்றார் ரங்கராஜன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications