அயோத்தி விவகாரம்: எதிர்கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி:
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் வி.எச்.பி. தலைவர்கள் நுழைந்தைதக் கண்டித்தும், பாதுகாப்புஅமைச்சராக மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டசை நியமித்ததை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் இன்று(செவ்வாய்க்கிழமை) வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. சமீபத்தில் மறைந்த நாடாளுமன்றஉறுப்பினரான மாதவராவ் சிந்தியா உள்பட பல உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பிறகுநேற்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது நாள் கூட்டம் இன்று துவங்கியது. நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ்பெர்னாண்டசின் நியமனத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.பின்னர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அதே போல காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சியினரும் இன்று நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர்.அயோத்தி விவகாரம் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர எதிர்க் கட்சியினர் முயன்றனர். ஆனால்,இதற்கு அனுமதி தர சபாநாயர் பாலயோகி மறுத்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் வெளிநடப்புசெய்தனர்.
காங்கிரசின் ஒத்திவைப்பு தீர்மானம்:
இதற்கிடையே மதப் பிரச்சனைகளைக் கிளப்பிவிட முயலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார்அமைப்புக்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)காலை அக்கட்சியின் தலைவி சோனியா காந்தியின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசியசோனியாகாந்தி கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக்கூட்டணியின் அரசு கொண்டுவர முயற்சிக்கும் "பொடோ" சட்டத்தைஎதிர்த்துக் காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் தெஹல்கா ஊழலில் தொடர்புடைய ஜார்ஜ் பெர்ணான்டஸை மீண்டும் அமைச்சராக்கியதன் மூலம் நாடுமுழுவதும் சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து வருகிறது. இதை எதிர்த்தும் காங்கிரஸ் எம்.பிக்கள் குரல்கொடுக்கவேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சங் பரிவார் இயக்கத்தினர் மீது மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்வாறு மதப் பிரச்சனைகளைக் கிளப்ப முயலும்பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் தோகாவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனக் கூட்டத்தில் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றமுடியாமல் போனதற்கு காங்கிரஸ் சார்பில் அவையில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications