தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு மதுரை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின்அனைத்து நகரங்களிலும் கண்டன ஊர்வலம், தர்ணா மற்றும் உண்ணாவிரம் போன்ற போராட்டங்களைநடத்தினார்கள்.
கடந்த 2 வாரகாலமாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போனஸ் கேட்டுப் போராடி வருகிறார்கள்.போராட்டத்தின் தொடர்ச்சியாக திங்கள் கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப் போராட்டங்களின் விவரம் வருமாறு,
மதுரை:
மதுரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டன. மதுரை மேலமாசிவீதி, வடக்குமாசி வீதி சந்திப்பில் இருந்து கண்டனப் பேரணி நடத்த போக்குவரத்துத் தொழிலாளர்கள்முடிவுசெய்தனர். ஆனால் காவல்துறை அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
தடையை மீறி பேரணி நடத்த முயன்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்துகொண்டு கண்டன ஊர்வலம்நடத்தினார்கள். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி தமிழக அரசுக்குஎதிராக கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டம் மிக நீண்ட நேரம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோட்டில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தர்ணாபோராட்டத்தில் கலந்துகொண்டனர். 500க்கும் மேற்பட்டவர்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் கண்டனப்தர்ணாப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தர்ணா ஈரோடு நகரசபை முன்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அனைகத்துத் தொழிலாளர்களும் தங்கள் குடும்பத்தடன் வந்து உண்ணாவிரப் போராட்டத்தில்ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்க உறுப்பினர்களும்கலந்துகொண்டனர். இவர்கள் தவிர அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர் கூட்டணிச் சங்கம் மற்றும் வங்கி அலுவலர்சங்கம் ஆகிய சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி, வேலூர், தர்மபுரி என்று தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் போராட்டம்நடத்தப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications