காங்கிரசில் சேருவது பற்றி வாழப்பாடி நாளை முடிவு
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் திரும்பவும் சேருவது குறித்த எனது முடிவை நாளை (புதன்கிழமை) அறிவிப்பேன் என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
நீண்ட நாட்களாகவே வாழப்பாடி மீண்டும் காங்கிரசில் சேரப் போகிறாரா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வந்தது.இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் மாறி, மாறி நிலவி வந்தன.
சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று சோனியா காந்தியையும் சந்தித்து விட்டு வந்தார் வாழப்பாடி.
அவர் காங்கிரசில் சேருவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத்தெரிகிறது. இதனால் காங்கிரசில் சேரும் திட்டத்தை வாழப்பாடி தள்ளிப் போட்டார்.
இதற்கிடையே இரு நாட்களுக்கு முன் திடீரென்று வாழப்பாடி வீட்டுக்குச் சென்ற இளங்கோவன், அவரைக்காங்கிரசில் சேருமாறு கேட்டுக் கொண்டார். இருவரும் அப்போது மனம் திறந்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக ராஜீவ் காங்கிரசின் அரசியல் விவகாரக் குழுவை நேற்று கூட்டிய வாழப்பாடி, காங்கிரசில்மீண்டும் ஐக்கியமாவது குறித்து உறுப்பினர்களுடன் விவாதித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்பது உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரசில் இணைவதற்குச் சம்மதம்தெரிவித்தனர். நாளை மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசவுள்ளார் வாழப்பாடி.
அவர்களுடன் பேசிய பிறகு, காங்கிரசில் சேருவதா இல்லையா என்பது பற்றிய முடிவை நாளை மாலை வாழப்பாடிராமமூர்த்தி அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications