தவணை முறையிலாவது போனஸ் வழங்க கருணாநிதி யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போனஸ் பிரச்சனையைத் தீர்க்க தவணை முறையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கலாம்என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறினார்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 12 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் அவர்கள் கோரி வருகிறார்கள்.இந்நிலையில் சென்னையில் இன்று (புதன்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது,

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தரவேண்டிய 20 சதவீத போனசில் 10 சதவீதத்தைஉடனடியாகவும், மீதி 10 சதவீதத்தை தவணை முறையிலும் வழங்கலாம். எனது இந்த ஆலோசனையைதொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழக அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். இதைவிடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும்தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிப்பது பிரச்சனையைத் தீர்த்து விடாது. இருதரப்பினரும்விட்டுக்கொடுத்தால் தான் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்றார்.

ராமதாஸ்:

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறுகையில், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டுபோக்குவத்துத் தொழிலாளர்களின் போனஸ் பிரச்சனையை அரசு உடனே தீர்த்து வைக்க வேண்டும்.

நிதிநிலைமை சீராக இல்லாததால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகையை தவணைமுறையில் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும்வெள்ளிக்கிழமை நடத்தத்திட்டமிட்டுள்ள முழு அடைப்பைத் தவிர்க்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

உலக வங்கியின் ஆலோசனைப்படி மாநில அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகமும், பஸ் வழித் தடங்களைத்தனியார்மயமாக்க அரசு முயல்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+