தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ்- வேன் மோதல்: 6 பேர் பலி
ஈரோடு:
காங்கேயம் அருகே அரசுப் பேருந்தும் திருமணக் கோஷ்டியினர் சென்ற வேனும் நேருக்கு நேர்மோதிக்கொண்டதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள்.
அரசுப் பேருந்தை ஓட்டியவர் தற்காலிக டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போதியஅனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர்களை வைத்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிய அரசுப் பேருந்து தீபாவளியன்று கோவில்பட்டி அருகே எதிரே வந்தவேனுடன் மோதியதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதேபோல தமிழகத்தில் பலபகுதிகளிலும் இந்தத் தற்காலிக டிரைவர்களால் பெரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பழநியில் இருந்து சேலத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து(டி.என்.-33 என்-1389), ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வட்டமலைப்பாளையம் என்ற இடத்தில்எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட 6 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். மேலும்13 பேர் பலத்த காயத்துடன் காங்கேயம் அரசு மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனில் வந்த அனைவரும் சேலம் அம்மாப் பேட்டையிலிருந்து பழநியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில்கலந்துகொள்ள வந்தவர்கள்.
இவர்களில் வேனில் இருந்த விஸ்வநாதன், பலராம் செட்டியார், அவரது மனைவி மனோன்மணி, லட்சுமி, வேன்டிரைவர் குமார், மற்றும் குழந்தை கவுசிக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து நடந்த இடம் ஒரு வளைவான பகுதியாகும். அந்த இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர்ஒன்றை முந்த முயன்றபோது எதிரே வந்த பஸ் மீது வேன் மோதியுள்ளது. இதில் தவறு வேன் டிரைவர் மீதா அல்லதுபேருந்தை ஓட்டிவந்த தற்காலிக டிரைவர் மீதா என்று தெரியவில்லை.
இதுகுறித்துத் தாராபுரம் டி.எஸ்.பி. குப்புசாமி, மற்றும் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்புநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications