சென்னையில் தரம் குறைந்த தங்க நகைகள் விற்பனை: அதிகாரிகள் கண்டுபிடிப்பு
சென்னை:
சென்னையில் உள்ள நகைக் கடைகளில் மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, தரம்குறைந்த நகைகள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் தர நிர்ணய நிறுவன துணை டைரக்டர் ஜெனரல் பி. ரவீந்திரநாத் நிருபர்களிடம்கூறியதாவது:
இந்திய தர நிர்ணய நிறுவனமும் தமிழக மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பும்இணைந்து இந்த மாத முதல் வாரத்தில் சென்னை நகைக்கடைகளில் ஒரு சர்வே நடத்தின.
அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 பிரபல தங்க நகைக் கடைகளிலிருந்து தங்க நகைகள்வாங்கப்பட்டன. இந்நகைகள் டெல்லியில் உள்ள தர நிர்ணய மதிப்பீட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த மையம் நடத்திய ஆய்வின்போது, நான்கு கடைகளில் வாங்கப்பட்ட நகைகள் மட்டுமே கடைக்காரர்கள்குறிப்பிட்டது போல் 22 காரட் அளவாக இருந்தன. மீதமுள்ள 11 கடைகளில் வாங்கப்பட்ட நகைகள் 11.82 சதவீதம்தரக்குறைவாகக் காணப்பட்டன.
இந்த சர்வேயின் மூலம் சென்னையில் தங்க நகைகள் வாங்கும் பொது மக்கள் 10 கிராமுக்கு சுமார் ரூ.500 வரைஏமாற்றப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
புதிய திட்டம்
இவ்வாறு பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க "ஹால்மார்க்" என்ற புதிய திட்டத்தை இந்திய தர நிர்ணயநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்நிறுவனத்தில் முறையான லைசென்ஸ் பெறும் தங்க நகைக் கடைகளில் உள்ள நகைகளுக்கு"ஹால்மார்க்" முத்திரை வழங்கப்படும்.
இந்த "ஹால்மார்க்" முத்திரை பதித்த நகைகளை மக்கள் வாங்கினால் அவர்கள் ஏமாறுவதைத் தவிர்க்கலாம்.நகையின் விலையில் ஒரு சதவீதம் மட்டுமே அதிகமாக அவர்கள் வழங்க வேண்டியிருக்கும்.
தங்க நகை வியாபாரிகள் இந்தத் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் ரவீந்திரநாத்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications