"நக்கீரன்" நிருபரைத் தேடக் கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கோபால் தந்தி
சென்னை:
நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள "நக்கீரன்" பத்திரிகை நிருபர்சிவசுப்பிரமணியத்தை உடனடியாகத் தேட உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி, பிரதமர்,தமிழக-கர்நாடக முதல்வர்கள் ஆகியோருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் கோபால் தந்தி அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரதிலுள்ள தன்னுடைய வீட்டை விட்டு நேற்று காலை 09.00 மணிக்குவெளியேறிய சிவசுப்பிரமணியம் மாலையில் வீடு திரும்பவில்லை என்றும் அவருடைய செல்போன் வேலைசெய்யவில்லை என்றும் கூறி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் அவருடைய மனைவி ஜெயந்தி புகார் செய்திருந்தார்.
சிவசுப்பிரமணியத்தை சிலர் காரில் கடத்திக் கொண்டு போனதாக அவருடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் சிலகடைக்காரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவரைத் தேடி வருகின்றனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை முதன் முதலாகக் காட்டுக்குள் சென்று பேட்டி எடுத்தவர் சிவசுப்பிரமணியன்தான். இவர்பல முறை வீரப்பனிடம் பேட்டி எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிப்பதற்காக நியமிக்கப்பட்டபேச்சுவார்த்தைக் குழுவில் சிவசுப்பிரமணியனும் இருந்தார்.
பேச்சுவார்த்தைக் குழுவில் அவர் இருந்ததால்தான் அவரை யாரோ கடத்தியுள்ளனர் என்று கருதிய "நக்கீரன்"கோபால் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கும் பிரதமர் வாஜ்பாய்க்கும் தந்தி அனுப்ப முடிவு செய்தார்.
அதன்படி, சிவசுப்பிரமணியத்தை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும்தந்தியை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு இன்று காலை கோபால் அனுப்பினார்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் தந்தி அனுப்பியுள்ளார்கோபால்.
மேலும், தமிழக-கர்நாடக தலைமைச் செயலாளர்களுக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தந்திகள்அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோபால் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications