காஷ்மீரில் ஊடுருவிய 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு:
காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற 12 தீவிரவாதிளை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
அப்போது அவர்களை எல்லைப் பாதுகாப்புப்படையினர் எச்சரித்தும் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து நுழையமுயன்றார்கள். இதனால் அவர்கள் அனைவரையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தான் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில பேப்பர்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதற்கிடையில் எல்லையின் மற்ற பகுதிகளில் பாகிஸ்தானியப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு நமது படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
58 கிலோ ஆர்.டி.எக்ஸ். பறிமுதல்
காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவத்தினர் நடத்திய திடீர் சோதனையில் 2 முகாம்கள்அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் 58 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
ராணுவத்தினர் நேற்று டெஹர்காம் மாவட்டத்திலுள்ள லோன் லேரி மற்றும் அனந்நாக் மாவட்டத்திலுள்ளஹல்சிதார் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 30 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், 28 ராக்கெட்டுகள், 44 கையெறிகுண்டுகள், 3 வெடிகுண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இதோபோல குப்வாரா மாவட்டத்திலுள்ள சத்வாரா காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந் 28கிலோ ஆர்.டி.எக்ஸ், 12 டைம் பாம்கள், 5 ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்தச் சோதனையின் போது நடந்த சண்டையில் ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications