பஸ், மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை
சென்னை:
தமிழக அரசின் நிதிநிலையை சீர்செய்வதற்கு பஸ் கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தலாம் என்றுநேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்றுசென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதலைமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள்வருமாறு,
மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை, சாலை வரி போன்றவற்றை அதிகப்படுத்தலாம் என்று அனைத்துஅமைச்சர்களும் கூறினார்கள். ஆனால் இதற்குச் சில அமைச்சர்கள் இந்த விலை உயர்வால் அரசின் மீதுகெட்டபெயர் ஏற்படும அதனால் பால் விலை, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தக் கூடாது என்று கூறியதாகக்கூறப்படுகிறது.
அப்போது நிதியமைச்சரும் மற்றவர்களும் பஸ் கட்டணம் சாலை வரி என்று எதை உயர்த்தினாலும் மக்கள் தவறாகத்தான் நினைப்பார்கள். ஆனால் நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளதே என்ன செய்ய என்று கேட்டார்களாம்.
மேலும் விவசாயிகளுக்கு கரும்பு விலையைக் குறைக்கலாம் என்று சொன்ன போது முதல்வர் பன்னீர்செல்வம்குறிக்கிட்டு, ஏற்கனவே தற்போதைய விலை போதாதென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் மேலும் கரும்பின் விலையைக் குறைத்தால் சரியாக இருக்காது என்று கூறிவிட்டாராம்.
இந்த விவாதங்கள் அனைத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர் எடுக்கும்முடிவின்படி செயல்படலாம் என்று அனைத்து அமைச்சர்களும் முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்துவது குறித்து கூட்டத்தில் எந்தஇறுதிமுடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications