கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனை: உதவ முடியாத நிலையில் ஐ.சி.சி.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல்கள் வருத்தமளிக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டதண்டனையில் எங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர்மால்கம் ஸ்பீட் கூறினார்.
இந்திய வீரர்களுக்காக கொடுக்கப்பட்ட தண்டமையை மாற்றினால், அப்புறம் கிரிக்கெட் விதிமுறைகள் எல்லாம்எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டால்மியா கோரிக்கை:
இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றுஇந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்தஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தத் தண்டனை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்துநடுவர் மைக் டென்னசைத் தூக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வீரர்கள் என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசினர். அவர்கள் இந்தியாதிரும்பியதும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் டால்மியா.
இந்தியா கொதிப்பு:
தண்டனை குறித்து டிவியில் விமர்சனம் செய்த இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் நவ்ஜோத்சிங்சித்து, நடுவர் மைக் டென்னசை "கொலையாளி" என்று வர்ணனை செய்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர் பிந்த்ரா, "தண்டனை அளிப்பதில் ஐ.சி.சி. இரட்டை நிலையைக்கடைப்பிடிக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.
டெண்டுல்கருக்கு ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு:
பந்தை சுரண்டி சேதப்படுத்திய குற்றத்திற்காக சச்சின் டெண்டுல்கர் கட்டாயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும்என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியுள்ளார்.
தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டனை பெற வேண்டும். கிரிக்கெட்டில் அவ்வப்போது தவறு செய்பவர்கள்தண்டிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் அத் தண்டனையை நீக்கக் கோருவது சரியல்லஎன்றார் வாஹ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications