வீரப்பனை முதலில் சந்தித்த நிருபர் கடத்தல்
ஆத்தூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனை முதல் முதலில் சந்தித்துப் பேட்டி எடுத்த நிருபர் சிவசுப்பிரமணியன் கடத்தப்பட்டுவிட்டதாக அவருடைய மனைவி நேற்று (செவ்வாய்க்கிழமை) போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
"நக்கீரன்" பத்திரிக்கையின் நிருபரான சிவசுப்பிரமணியன், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில்வசித்து வருகிறார்.
காட்டுக்குள் சென்று சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்தித்து முதல் முறையாகப் பேட்டி எடுத்தவர்சிவசுப்பிரமணியன்.
இவருடைய மனைவி ஜெயந்தி நேற்று மாலை ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அப்புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:
மாலை நான்கு மணிக்குள் வந்து விடுவதாகக் கூறிய என் கணவர் சிவசுப்பிரமணியன் காலை ஒன்பது மணிக்குசேலத்திற்குச் செல்லப் போவதாகப் புறப்பட்டார்.
அப்போது போலீசார் போன்று தோற்றமளித்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் வந்தனர். பின்னர்அவர்களுடன் பேசிக் கொண்டே என் கணவர் மெயின் ரோடு வரை சென்றதை எங்கள் வீட்டு பால்கனியிலிருந்துநான் பார்த்தேன்.
எப்போதும் என் கணவர் வெளியில் சென்றவுடன் என்னுடன் போன் செய்து பேசுவார். ஆனால் அவரிடமிருந்துபோனே வரவில்லை.
மாலை நான்கு மணிக்கும் அவர் வீடு திரும்பவில்லை. இது எனக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.
இதையடுத்து அவருடைய செல் போனைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அந்த செல் போன் இயங்கவில்லை.
சேலத்தில் உள்ள என் கணவருடைய சில நண்பர்களிடமும் போன் செய்து பேசினேன். ஆனால் அவர் அங்குவரவில்லை என்று அவர்கள் கூறினர்.
இதனால் என் கணவரை யாரோ கடத்தியிருப்பார்கள் என்று அஞ்சுகிறேன். அவரை உடனடியாகக் கண்டுபிடித்துத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார் ஜெயந்தி.
இதுகுறித்துப் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சிவசுப்பிரமணியம் வீட்டின் அருகே உள்ள மெயின்ரோட்டிலுள்ள சில கடைகளில் போலீசார் விசாரித்தனர்.
காலையில் சிவசுப்பிரமணியத்தை அழைத்து வந்த நபர்கள் மெயின் ரோட்டிலிருந்த கார் அருகில் வந்ததும்,அவருடைய கழுத்தைப் பிடித்து காருக்குள் தள்ளி துணியால் முகத்தை மூடி அழைத்துச் சென்றதாக சிலகடைக்காரர்கள் கூறினர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணை தீவிரமாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications